ADVERTISEMENT

ஆம்புலன்ஸ் வர தாமதம்... ரயில் பயணி மாரடைப்பால் உயிரழப்பு.

03:17 PM Oct 12, 2019 | Anonymous (not verified)

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் தேனாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஏசுப்பு (64) என்பவர் காரைக்கால் ரயிலில் சென்னையில் இருந்து கன்னியாகுமாரிக்கு குடும்பத்தினர் உடன் சென்றார். அப்பொழுது ரயில் திண்டிவனம் வரும் போது ஏசுப்புவிற்க்கு திடீர் என மாரடைப்பு எற்பட்டது. பயணிகள் மூலமாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிஸ்சார் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT


ஆம்புலன்ஸ் வருவதற்க்குள் ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்துக்குச் வந்தது, உடனடியாக ரயில்வே உதவி ஆய்வாளர் ஹரிதாஸ், தலைமை காவலர் பத்மராஜ் காவலர் நரசிம்மன், அங்கிருந்த மற்ற பயணிகள் உதவியுடன் முதலுதவிகள் செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏசுப்புவை சோதித்த மருத்துவர் ஏசுப்பு வரும் வழியிலேயே உயிழந்தாக மருந்துவர் தெரிவித்தர்.ரயில்வே போலிஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT


மேலும் உறவினர்கள் கூறுகையில் 108 ஆம்புலன்ஸ் உடனடியாக வந்திருந்தால் ஏசுப்புவின் உயிரை காப்பற்றி இருக்கலாம் என தெரிவித்தனர். நாளை முதல்வர் விக்கரவாண்டி இடை தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், ஆம்புலன்ஸ் அனைத்தும் அங்கு சென்று விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT