/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3600.jpg)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதி 1 -ஐசேர்ந்தவர் (30 வயது) ரகுவரன்,இவரது மனைவி மகாலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 11 வயதில் கிரி என்ற ஒரு மகன், 9 வயதில் தமிழ்ச்செல்வி ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் கோட்டைமேடு அகல்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மகாலட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது விக்னேஷ் என்ற இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழக்கம் நெருக்கமாகி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மகாலட்சுமியின் கணவர் ரகுவரன் மனைவியைக் கண்டித்துள்ளார்.
இதனிடையே கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மகாலட்சுமி சென்னைக்கு வேலைக்கு செல்லாமல் கடந்த நான்கு மாதங்களாக கணவருடன் திண்டிவனத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுவரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே விக்னேஷ் அவ்வப்போது திண்டிவனம் வந்து மகாலட்சுமியை சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு மகாலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்று தனது வீட்டில் உள்ள அவரது அம்மா, அப்பா படத்திற்கு முன்பாக விக்னேஷ் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த ரகுவரனுக்கும், மனைவி மகாலட்சுமிக்கும்அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மகாலட்சுமி கணவனுடன் ஏற்படும் சண்டை பிரச்சனைகள் குறித்து, விக்னேசுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து திண்டிவனம் வந்த விக்னேஷ் மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். இவரைக் கண்டதும் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னுடன் மகாலட்சுமி அழைத்து செல்ல விக்னேஷ் முயன்றுள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த ரகுவரன் தன் கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் விக்னேஷின் முதுகில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தப்பிச்செல்ல முயன்றபோது தெருவில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துகிடந்த விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விக்னேஷைகொலைசெய்த ரகுவரன் மற்றும் மகாலட்சுமியை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். திண்டிவனம் பொறுப்பு டி.எஸ்.பி. பாலச்சந்தர்,இன்ஸ்பெக்டர் சீனிபாபு, காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)