/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500_45.jpg)
திருநெல்வேலியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு டாட்டா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே உள்ள பாதிரி என்ற இடத்தில் சுமோ காரை ஓட்டிச் சென்ற டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து சென்று சுமோ கார் விழுந்தது.
இந்த விபத்தில் இரும்பு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை நடந்த இந்தக் கோர விபத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரோனா பரவல் தடுப்பு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மூலம் அத்தியாவசியப் பணிகளுக்காக இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே சாலையில் வாகனங்கள் மூலம் பயணிக்கின்றனர்.
தற்போது ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் மற்றும் சுங்கச்சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் அதிக அளவு வாகனப் போக்குவரத்து இல்லாத இந்த நேரத்திலும், இதுபோன்ற கோர விபத்துகளும்உயிரிழப்புகளும்ஏற்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)