Advertisment

கனவுகள் நிறைவேறும் காலம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி பதிவு

Advertisment

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகே இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது கனவுகள் நிறைவேறும் காலம்’ எனும் தலைப்பில்ஒருகாணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தென்றலின் தாலாட்டில் தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்கு பக்கத்தில் கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே” என ஆரம்பிக்கும் அந்தக் காணொளியில், “உங்களுக்குச் சொல்ல ஒரு நல்லசெய்திகொண்டுவருகிறேன்.. உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிவருகிறோம் தலைவரே..” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான் இந்த நவீன தமிழ்நாடு. நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை இடையில் புகுந்த கொத்தடிமைக் கூட்டம், சிதைத்ததின் விளைவாக தாழ்வுற்றது தமிழ்நாடு. தாழ்வுற்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து மீண்டும் உங்கள் ஆட்சிக் கால தமிழ்நாடாக உருவாக்கி வளர்த்தெடுக்க எந்நாளும் உழைத்துவருகிறேன். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..’ என்றீர்கள். அந்தக் கரகர குரல்தான் கண்டிப்பு குரலாக என்னை உழைக்கவைத்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அவர் அந்தக் காணொளியில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது. இந்தக் கட்சி ஆட்சியா? அந்தக் கட்சி ஆட்சியா? என்பதற்கான விடை அல்ல இந்தத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயகம் இருக்கவேண்டுமா; இருக்க முடியாதா? என்பதற்கான தேர்தல் இது. நீங்கள் சொல்வீர்களே, ‘தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்கான குரல் எழுப்ப வேண்டும்’ என்று, அப்படி தான் இந்தியாவுக்கான குரலை எழுப்பதுவங்கியிருக்கிறோம்” என்று நீள்கிறது அந்தக் காணொளி. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kalaignar mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe