Advertisment

முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!

Time change of major trains

Advertisment

வைகை, பொதிகை மற்றும் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் கால அட்டவணையில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட கால அட்டவணை நாளை (01.10.2023) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ரயில்களின் கால அட்டவணை மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12636) காலை 7.10 மணிக்கு பதிலாக 6.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதே சமயம் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12635) வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

செங்கோட்டை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12662) மதுரையில் இருந்து இரவு 09.55 மணிக்குப் பதிலாக 09.45 மணிக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12661) மதுரையில் இருந்து அதிகாலை 04.45 மணிக்குப் பதிலாக 04.30 மணிக்கு இயக்கப்படும். மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12638) மதுரையில் இருந்து இரவு 09.35 மணிக்குப் பதிலாக 09.20 மணிக்கு இயக்கப்படும்.

Advertisment

மதுரை - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்குப் பதிலாக 07.00 மணிக்கு இயக்கப்படும். மதுரை - விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16868) மதுரையில் இருந்து அதிகாலை 04.05 மணிக்குப் பதிலாக 03.35 மணிக்கு இயக்கப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe