Advertisment

“என்னுடைய யூடியூப் சேனலை முடக்கினால் நான் தீக்குளிப்பேன்” - வீடியோ வெளியிட்ட டிக் டாக் பிரபலம்

pic_7.jpg

ஆபாசபதிவு வெளியிடுவதாகக் கூறி யூடியூப் சேனலை முடக்கினால்தீக்குளிப்பேன் என்று டிக் டாக் பிரபலம்சூர்யா வெளியிட்டவீடியோ வைரலாகிவருகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக பள்ளி,கல்லூரிகள் திறக்காததால், மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையதளத்தில் அதிக நேரம் செலவிடும்சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி சம்பாதிக்கும் நோக்கில் சிலர், ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்துவருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

Advertisment

இந்நிலையில், புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி பேபி என்றழைக்கப்படும் டிக் டாக் புகழ் சூர்யாவின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகின்றனர். என்னுடைய யூடியூப் சேனலை முடக்கினால், நான் தீக்குளிப்பேன்’ என்று பேசும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

tik tok
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe