டிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவசங்கரன்.இவரது மனைவி பெயர் சூரியகாந்தி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. கடந்த சில மாதங்களாக சிவசங்கரன் மனைவி சூரியகாந்தி டிக்டாக்கில் அதிகமாக வீடியோ போட்டுள்ளார். அதிலும் முசிறியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரோடு இணைந்து அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் இருந்த டிக் டாக் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளன. இந்த டிக் டாக் வீடியோக்களை பார்த்த சிவசங்கரன் மனைவி உடன் சண்டை போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சண்டை அதிகமாகவே ஆத்திரத்தில் மனைவியை சிவசங்கரன் கொலை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

husband wife

கொலை செய்த பின்பு அவரை சாக்குப்பையில் கட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் போட்டுவிட்டு மனைவியைக் காணவில்லை என்றும் நாடகம் ஆடியுள்ளார். அதோடு சூரியகாந்தி அவளோடு டிக் டாக் வீடியோ பண்ணும் சக்திவேல் என்ற இளைஞருடன் போயிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.இவர் கூறியதில் போலீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சூரியகாந்தியின் செல்போன் சிக்னல் அவர்கள் வீடு இருந்த பகுதியிலேயே ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதைக் கண்டு சிவசங்கரன் மேல் சந்தேகம் வர போலீஸ் தீவிரமாக சிவசங்கரனை விசாரணை செய்துள்ளனர். பின்பு சூரியகாந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

husband issues karur TikTok wife
இதையும் படியுங்கள்
Subscribe