அண்மையில் டிக் டாக்வீடியோக்கள் வெளியீட்டு அதனால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் இறுதியில் கொலை வரை செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் எல்லை மீறி டிக் டாக் வீடியோக்கள் வெளியிட்டது மட்டுமல்லாமல் இதனால் சில ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டியதால் கணவனே மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

INCIDENT IN THURIPATHY

திருப்பதியை அடுத்த தனிகிரிமண்டலம், தாலாறு கிராமத்தைச் சேர்ந்த ஷேக்பாஷாவின் மனைவி பாத்திமா. ஷேக்பாஷா டைலராக பணியாற்றி வரும் நிலையில் மனைவியான பாத்திமா டிக் டாக் வீடியோக்களை பார்க்கும் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில் அவரும் டிக் டாக் வீடியோக்களை எடுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். டிக் டாக் வீடியோ வெளியிட்ட பாத்திமா லைக்கிற்காக கடந்த சில மாதங்களாக அவருடைய நடிப்பு திறமையையும், நடன திறமையையும் வெளிக்காட்டும்படி டிக் டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார்.

INCIDENT IN THURIPATHY

Advertisment

பாத்திமாவின் வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் வீடியோக்கள் சூப்பராக இருப்பதாக கூற, இதனால் மகிழ்ந்துபோன பாத்திமா கணவர் ஷேக்பாஷா கடைக்கு சென்ற பிறகு வீட்டில் நாட்டியம் என்ற பெயரில் குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்த பாத்திமா ஒரு கட்டத்தில் நடுரோட்டில் நின்று கொண்டு அவரது தோழியுடன் டிக்டாக் செய்து வெளியிட்டதால் குடும்பத்தில் பிரச்சனை உருவெடுத்தது.

INCIDENT IN THURIPATHY

பாத்திமாவை கணவர்ஷேக்பாஷா இதுபோல் இனி செய்யக்கூடாது என்று கடுமையாக கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் ஷேக்பாஷா தகவல் தெரிவிக்க வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது தற்கொலை அல்ல கொலை செய்யப்பட்டு அவர் தூக்கில் தொங்க விடபட்டிருப்பதை கண்டறிந்தனர். மேலும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் பாத்திமா டிக் டாக்மூலம் அறிமுகமான சில ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்ததால் அதனை பலமுறை கண்டித்தும் எதற்கும் அஞ்சாமல் மீண்டும் டிக் டாக் வீடியோ வெளியிடுவதிலும், ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டுவதிலும் நேரத்தை போக்கி வந்ததால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Advertisment

INCIDENT IN THURIPATHY

இதனால் ஆத்திரமடைந்த செயல்பாட்டால் பாத்திமாவை உருட்டுக்கட்டையால் நடுதலையில் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் கொலை செய்யப்பட்டது தெரிய வர ஷேக்பாஷாவைகைதுசெய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.