''டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் அதிமுக அரசு, ஆறுகளிலும் விளைநிலங்களிலும் மணல் கொள்ளை நடத்துவதை நிறுத்த வில்லை," என கண்ணீரோடு கூறுகிறார்கள் கொள்ளிடக் கரையோரம் உள்ள விவசாயிகள்.

Advertisment

Sand burglary on a protected farm

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேராபத்தை உண்டாக்கும் திட்டங்களில் இருந்து, காவிரி படுகையை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். ஆனால் மணல்குவாரிகள் அமைக்ககூடாது என நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் அரசு அனுமதி என்கிற பெயரில் ஆறுகளை குடைந்து பல அடி ஆழத்திற்கு மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.

Sand burglary on a protected farm

Advertisment

இதுகுறித்து கொள்ளிடக்கரையோரம் நிலக்கடலை விவசாயம் செய்துவரும் விவசாயி முடிகண்டநல்லூர் சண்முகம் கூறுகையில்," அரசு மணல் குவாரி என்கிற பெயரில் முடிகண்டநல்லூர் கொள்ளிடக்கரையில் மணல் அள்ளுகின்றனர். இதற்கு 2017, 18 க்கு 18 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதி காலத்தை தாண்டி, மணலை தோண்டி கடத்துகின்றனர். இங்கிருந்து நாகை, வேதாரண்யம்,தலைஞாயிறு, மயிலாடுதுறை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு குடிதண்ணீர் போகிறது. அதற்கான கிணறும் மணல்குவாரிகளுக்கு அருகிலேயே இருக்கிறது.அதோடு ஆதனூர், குமாரமங்கலம் இடையே அமைந்துவரும் தடுப்பணைக்கு அருகிலேயே மணல் அள்ளுகின்றனர். ஆறுகளில் தண்ணீரை காக்கும் மணலை கொள்ளையடித்துவிட்டால் நிலத்தடி நீர் எப்படி தங்கும், பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் மணல் அள்ளுவதும் தவறுதான், நாங்கள் நிலத்தில் கடலை சாகுபடி செய்துவருகிறோம், அதன் ஓரத்திலேயே மணல் அள்ளுறாங்க, அடுத்த ஆண்டு எங்க நிலமை என்ன ஆகும், இதை தமிழக அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்கனும்,"என்கிறார்.