Advertisment

கொடைக்கானலில் புலிகள் நடமாட்டம்!

tiger

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கொடைக்கானல் மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் மலை கிராமத்தில் வாழும் மக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த கொடைக்கானல் பகுதியில் உள்ள மேல்மலை கீழ்மலை பகுதிகளில் உள்ள கூக்கால் பேரிச்சம் உத்தரவு வனப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் நிலையங்கள் இருக்கிறது.

Advertisment

இந்தநீர் நிலையங்களில் இரவில் புலிகள் நடமாடுகின்றன கடந்த சில தினங்களுக்கு முன் ஏரியை ஒட்டி கரைப்பகுதியில் புலியின் கால் தடம் பதிவாகியுள்ளது. அதுபோல் வனப்பகுதிக்கு உட்பட்ட பரப்பாறு நீர்நிலை ஓரம் கடமானை புலி வேட்டையாடி சாப்பிட்டுவிட்டுபோய் இருக்கிறது. அந்த இடத்தில் கடமான் எலும்புக்கூடுகளும் கிடந்தன.

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வியிடம் கேட்டபோது... கடந்த ஆண்டு ஆகஸ்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொடைக்கானல் வனப்பகுதியில் ஐந்து புலிகள் இருக்கிறது என்று கூறினார். ஆனால் புலிகள் இருக்கும் இடத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் வரை ஆதிக்கம் செலுத்தும் குணமுடையதாகும் என்பதால் அப்பகுதியில் வாழக்கூடிய கூக்கால் மற்றும் பேரியம் போன்ற வனப் பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் பெரும் பீதியில் இருந்துவருகிறார்கள்.

kodaikanal tiger
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe