ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் இரண்டு புலிகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு வயது புலி பலியானது.

Advertisment

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேகமலை, வெள்ளிமலை, வருஷநாடு வனப்பகுதிகளில் புலி, யானை, கரடி, செந்நாய் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன. இங்கு விலங்குகள்மட்டுமில்லாமல்மூலிகை செடிகள், அரிய வகை மரங்கள் நிறைந்து காணப்படுவதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Tigers attack one another in forest

ஆகையால் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். வருஷநாடு வனச்சரகத்திற்குஉட்பட்ட வெள்ளிமலை கஜம் பகுதியில் புலி ஒன்றின் சடலம்கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வருசநாடு வனசரகர் ஆறுமுகம், கால்நடை டாக்டர் வெயிலோன் தலைமையில் வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வயதான புலி இறந்து அழுகிய நிலையில் இருந்தது.

வனப்பகுதியில் இரண்டு புலிகள் சண்டை போட்டுள்ளனஅதில் ஒரு புலி பலியாகி இருக்கிறது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்ட காட்சிகள்வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பின் புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.

Advertisment

இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.