குமாி மாவட்டத்தில் மருந்துவாழ் மலையிலிருந்து குஜராத் வரை மேற்கு தொடா்ச்சி மலை பரந்து விாிந்து கிடக்கிறது. இதில் குமாிமாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரண்கோணம், சீதப்பால், திட்டுவிளை பகுதியில் காணப்படும் மேற்கு தொடா்ச்சி மலை ரம்மியமான சூழ்நிலையில் வயல் வெளிகளோடு குடியிருப்பு கொண்ட கிராமங்களும் சூழ்ந்துள்ளன.

Advertisment

tiger or Cat? Villagers in fear!

இதில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரல்வாய்மொழியில் பொய்கை அணை பகுதியில் மேய்ச்சலுக்கு நின்ற ஆடுகள் மா்மமான முறையில் கடிப்பட்டு இறந்து கிடந்தன. அப்போது அந்த மக்கள் புலி கடித்து ஆடுகள் இறந்ததாக கூறினாா்கள். அதே போல் சீதப்பாலில் மலையில் உள்ள பாறை மீது சிறுத்தை புலி ஏறி நின்று அச்சுறுத்தியதாக கூறி அங்கு செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டியிருந்த தொழிலாளா்கள் ஓட்டம் பிடித்தனா். இந்த தகவல் கேட்டு அங்கு சென்ற வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல் தடிக்காரம்கோணம் மலைபகுதியில் வேலைக்கு சென்று கொண்டியிருந்த தொழிலாளா்கள் புதருக்குள் இருந்து புலி உறுமும் சத்தம் கேட்டதாக கூறி அலறியடித்து ஓடிய அந்த தொழிலாளா்கள் அழகியபாண்டிபுரம் வனத்துறையினாிடம் கூறினாா்கள். உடனே அங்கு சென்ற வனத்துறையினா் அங்கு பதிவான கால்தடயங்களை ஆய்வு செய்தனா். அந்த தடயம் காட்டு பூனையின் கால் தடயத்தோடு ஒட்டி போயிருந்ததாக கூறினாா்கள்.

Advertisment

tiger or Cat? Villagers in fear!

இந்தநிலையில் இன்று மாலையில் புத்தோி வயல் வெளியில் சிறுத்தை புலி நடமாடுவதாக கிராம மக்களுக்கு தகவல் பறந்தது. உடனே வனத்துறையினரோடு கிராம மக்களும் கையில் கம்புடன் வயல் வெளிகளில் இறங்கி சிறுத்தை புலியை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அங்கு சிறுத்தை புலி பதுங்கியிருந்ததற்கானஅடையாளங்கள் இல்லை.

இதனால் தொடா்ந்து இப்படி அச்சுறுத்துவது சிறுத்தை புலியா? அல்லது காட்டு பூனையா? என தொியாமல் அச்சத்தில் மக்களும் கண்டு பிடிக்க முடியாமல் வனத்துறையினரும் உள்ளனா்.