
நீலகிரி தெப்பக்காடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் புலியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கும்கி யானையின் உதவியுடன் புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் கிராமம் ஒன்றில் வேட்டைத் தடுப்பு காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புலியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். இதுதொடர்பாக மற்ற வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கும்கி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் புலியைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.