இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் கேட்டு வற்புறுத்திய நடத்துனரிடம் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுகொள்கிறேன் என பேருந்திலேயே குழந்தையைவிட்டு சென்றார் குழந்தையின் தந்தை.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா, அவரது இரண்டரை வயது குழந்தை முகமது உசேன். குழந்தையை அழைத்துக்கொண்டு திருவாரூக்கு அரசு பேருந்து ஒன்றில் சென்றிருக்கிறார். மங்கைநல்லூரை தாண்டியதும் நடத்துனர் டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். அப்போது 40 ரூபாயை கொடுத்து திருவாரூருக்கு ஒரு டிக்கெட் கேட்டிருக்கிறார் இதயத்துல்லா. உங்க மகனுக்கும் டிக்கெட் எடுக்கனும் என நடத்துனர் கூற, எம்புள்ளைக்கு இரண்டரை வயதுதான் ஆகுது அவனுக்கு டிக்கெட் எடுக்கனுமா என்று கூற, உங்க மகனுக்கு 3 வயதை தாண்டியிருக்கும் நீங்க பொய் சொல்றீங்க, டிக்கெட் எடுத்துதான் ஆகவேண்டும் என கராராக கூறியிருக்கிறார் நடத்துனர்.
கோபமான இதயத்துல்லா என்னோட மகனின் பிறப்பு சான்றிதழை எடுத்துவந்துகாட்டிவிட்டு குழந்தையை வாங்கிகொள்கிறேன் என கூறி குழந்தையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கிவிட்டார். குழந்தையோடு பேருந்து சென்றதால் பயனிகளிடம் அதிர்ச்சி உருவானது. ஆனாலும் யாரும் தட்டிக்கேட்கவில்லை. 10 கிலோ மீட்டர் சென்று பேரளம் காவல்நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.
இந்நிலையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழோடு அடுத்தபேருந்தில் வந்தார் இதயத்துல்லா, குழந்தை சென்ற பேருந்து பேரளம் காவல்நிலையத்தில் நிற்பதை கண்டு இறங்கி காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு குழந்தையோடு நின்ற நடத்துனரிடமும். காவலர்களிடமும் பிறப்பு சான்றிதழை காட்டி நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூச்சல் இட்டார்.
இதயத்துல்லாவின் நியாயமான கோரிக்கையை ஏற்ற போலீசார், சம்பவம் நடந்தது மயிலாடுதுறை லிமிட் அங்க கொடுங்க என பேசி அனுப்பிவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)