/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/143_10.jpg)
ஜனவரி மாதம் நடைபெற இருந்த 45வது சென்னை புத்தகக் காண்காட்சி கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதையடுத்து, பிப்.16 முதல் மார்ச் 6ஆம் தேதிவரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பபாசி அமைப்பு தீவிரம் காட்டிவருகிறது.
இந்த நிலையில், புத்தகக் கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பை பபாசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பபாசி அமைப்பின் இணையதளத்தில் நாளை முதல் முன்பதிவு செய்து வாசகர்கள் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 16ஆம் தேதி மொத்தம் 800 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)