Advertisment

'டிக் அடித்த தேர்தல் ஆணையம்'- வெளியிட இருக்கும் விஜய்

 'Ticked Election Commission'- Vijay to be released

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கட்சி பெயருக்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை வீடியோ வாயிலாக விஜய் வெளியிட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக மாநாடு நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகம் முனைப்பு காட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவிப்பைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வாய்மொழியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe