Advertisment

'டிக்' அடித்த அமைச்சரவை; பங்கேற்க முடியாத உதயநிதி

'Ticked' cabinet; Unable to participate Udhayanidhi

Advertisment

அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் வழக்கமான நடைமுறை என்ற அடிப்படையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தற்பொழுது தொடங்கியுள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காசொல்ல இருக்கிறார். கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரை முதல்வர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசினுடைய வழக்கமான நடைமுறை என்பதன் அடிப்படையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்லும் பொழுது அமைச்சரவை கூடி ஒப்புதலை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்று தமிழக அமைச்சரவை கூடியது.

இதில் முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதோடு முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. மற்ற மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றிருந்தஉதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. தற்பொழுது வரை அவர் சென்னை திரும்பாத நிலையில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

meetings minister
இதையும் படியுங்கள்
Subscribe