ADVERTISEMENT

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு, கமாண்டோ போலிஸார் சோதனையால் பரபரப்பு

01:00 AM Oct 17, 2018 | selvakumar


திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பரிவு காவல்துறையினரும் மற்றும் சென்னை கமாண்டோ பாதுகாப்பு பிரிவினரும் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் மாயமானதை குறித்தும் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் சிலைகள் குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கோயிலில் உள்ள சிலைகள் சரியாக உள்ளதாக என ஆய்வு மேற்கொண்டார் பொன்.மாணிக்கவேல். அப்போது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன் என கூறியிருந்தார். அதன்படியே செவ்வாய்க்கிழமை திருவாரூர் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள ஆய்வாளர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சிலைகளும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வுசெய்ய முதற்கட்டமாக ஆய்வாளர் அண்ணாதுரை வந்துள்ளதாகவும் விரைவில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்ய வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதில் ஒரு பகுதியாக சென்னை கமாண்டோ பாதுகாப்பு துறையினர் சார்பில் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வாளர் மாறன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் கோயிலின் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தியாகராஜர் திருக்கோவிலில் திடீர் சோதனை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT