thuthookudi incident... shocking information released during the investigation!

Advertisment

தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற தாயையே 17 வயது மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வண்ணார் 2வது தெருவைச் சேர்ந்தவர்கள் மாடசாமி-முனிய லட்சுமி தம்பதியினர். முனிய லட்சுமிக்கும் மாடசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியாக வசிக்கும் தாய் முனியலட்சுமியுடன் மூத்தமகளான 17 வயதுடைய சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் இன்று முனியலட்சுமி வீட்டில் சடலமாககிடப்பதாக காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த முனிய லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த முனிய லட்சுமியின் உடலில் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்ட அடையாளங்கள் இருந்ததால் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். விசாரணையில் தாயை 17 வயது மகளேஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது, தாய் முனியலட்சுமிக்கும் 17 வயது மகளுக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.17 வயது மகளுக்கு பல ஆண் நண்பர்கள் இருந்ததால் அதனை தாய் முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் அவரது ஆண் நண்பர்கள் 3 பேரை இணைத்துக் கொண்டு நேற்று நள்ளிரவு தாயின்கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற தாயை மகளேகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.