Advertisment

பச்சமலையில் கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்ட வன அதிகாரி!

Forest officials

Advertisment

கரோனா வைரஸ் பரவலில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களை வீட்டிலே தனித்து இருக்க சொல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகே பச்சைமலை பூதக்கால் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காட்டு பகுதியில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வனவிலங்குகளை கள்ளத்துப்பாக்கியால் வேட்டையாடுவதாக தொடர்ச்சியாக வனத்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து வனத்துறையினர் நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் ரோந்து சென்று உள்ளனர். அப்போது பச்சமலை பூதக்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கள்ளத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாடிய கொண்டிருந்த நபரை பார்த்ததும் அவனை பிடிக்க சென்ற போது கள்ளத்துப்பாக்கியால் சுட்டதில் வனகாப்பாளர் வீரபாண்டியன் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த வீரபாண்டியன் திருச்சி அரசு் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவு நேரம் என்பதால் கள்ளத்துப்பாக்கியல் சுட்ட அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை என்றும் வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய நபரை வனத்துறை அதிகாரிகள், குழு அமைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

வனத்துறையினர் உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் முசிறி காவல்துறை டிஎஸ்பி தலைமையில் போலீஸார் தேடி வருகின்றனர். வனத்துறையில் ரோந்து சென்ற வனஅதிகாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

forest officials thuraiyur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe