Advertisment

இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு!

thunderstorm in Cuddalore

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட கொம்பாடி தெருவை சேர்ந்த ராம்குமார் மற்றும் பழைய மருத்துவமனை தெருவை சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட பல இளைஞர்கள் நகரப்பாடி பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கிய போதும், அவர்கள் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இடிமின்னல் தாக்கியதால், ராம்குமார் மற்றும் பிரவீன் சம்பவ இடத்திலேயே உடலில் காயங்களுடன் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் அவருடன் விளையாடிய இளைஞர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதேபோல் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த சின்னத்துரை என்ற தினக்கூலி வேலைக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பள்ளிப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், இடிமின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடலில் காயங்களுடன் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Cuddalore incident thunder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe