/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/peros434.jpg)
கடலூர் அருகே உள்ளநெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலைப் பார்த்து வருகிறார். அந்த பெண்ணை குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த சரவணன் (வயது 23) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் பணி முடிந்த பிறகு கம்பியம்பேட்டையில் ஒரு இடத்தில் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை மிரட்டி வீடியோ எடுத்து அந்தப் பெண்ணைவன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த வழியாக காவல்துறையினர் வந்தபோது, அந்த பெண் இதுகுறித்து காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் மேற்பார்வையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் குப்பன்குளம் காலனியை சேர்ந்த சதீஷ் (வயது 19), கிஷோர் (வயது 19), புதுப்பாளையம் ஆரிப் (வயது 18) ஆகிய மூவரை பிடித்து, விசாரித்து கைது செய்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)