சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
சென்னை மாநகராட்சியின் பசுமை பரபரப்பளவை அதிகரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டபிரதான சாலைகள் மற்றும் உட்புற தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவகிறது. மரங்கள் வளர தரமான மண், சூரிய ஒளி ஆகியவை தேவை, அப்படிப்பட்ட நிலையில் இயற்கைக்கு மாறாக மரங்களில் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் பாதுக்காக்க வேண்டிய கடமை பொதுமக்களாகிய நம்முடையது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் சில தனியார் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர அட்டைகளை மரங்களில் அணியைக் கொண்டு அடித்து அல்லது கயிற்றினால் கட்டி விளம்பரம் செய்கின்றன. மரங்களில் வண்ணம் பூசுவதுடன் வண்ண விளக்குகள் பொருத்துவதால் மரங்களின் வாழ்நாள் குறைகிறது. இப்படி மரங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பர பலகைகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகரட்சி முனிசிபல் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326 ஐ பிரிவுப்படி 25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும்.
பொதுமக்கள் இது தொடர்பாக 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.