Advertisment

மூன்று வயது பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை

bo

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இலுப்பூர் அருகே மூன்று வயது பெண்குழந்தை வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி விவசாயி. அவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு ஷாலினி (3) மற்றும் ஒரு வயது ஆண்குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.

Advertisment

ஷாலினி வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஷாலினி திடீரென மாயமானார்.

இதனையடுத்து ஷாலினியை காணவில்லை என குடும்பத்தினர் வீட்டிற்குள் தேடியுள்ளனர். அங்கு காணவில்லை என்றதால் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் வீட்டிற்கு அருகில் இருந்த காட்டுப் பகுதியில் தேடிய போது ஷாலினி இரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அருகில் மிச்சர் போன்ற தின்பண்டங்கள் சிதறிக் கிடந்துள்ளது. இதை கண்ட ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுமியின் உடலை கைப் பற்றி பிரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் மூன்று வயது பெண் குழந்தை கழுத்து அறுத்து கொள்ளப்பட்ட சம்பவத்தால் இலுப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe