Advertisment

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

Three women arrested for drug selling

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் டவுன் பகுதி பொதுவாகவே எப்போதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர்வந்து செல்லும் மையப்பகுதியாக உள்ளது. இந்த நகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தினர், அதில் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கண்டுபிடித்தனர்.

அந்தப் பெட்டிக்கடையைசோதனை செய்தபோது போதைப் பொருட்கள் அடங்கிய பத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளைக் கண்டெடுத்தனர். இந்தக் கடையில் வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக மூன்று பெண்களைக் கைதுசெய்தனர். இவர்கள் வைத்திருந்த ஹான்ஸ், விமல் பாக், சைனி ஹைனி பாக்ஆகிய கம்பெனிகளில் போதை தரும் சுமார் 800 பாக்கெட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பதினைந்தாயிரம் வரை இருக்கும் என தெரிகிறது.

அந்தப் பெண்களில் ஒருவர் பெங்களூருவிலிருந்து போதைப் பொருட்களை வரவழைத்து உடனிருக்கும் பெண்கள் மூலம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பெண்களையும் கைது செய்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

Drugs kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe