
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் கிரின் லைஃப் என்ற நிதி நிறுவனம் இயங்கிவந்தது. திருச்சி அஸ்மத்கான் கோரி (35), திருச்சி நத்தமாடிபட்டி மெயின்ரோடு திருநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த அம்ஜத்கான் கோரி (36), திருச்சி உறையூர் சாலை ரோட்டைச் சேர்ந்த சையது முகமது ரபி ஆகியோர் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆவர். இவர்கள் மூன்று பேரும், முதலீட்டு தொகை பெற்று ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பாகப் பணம் தருவதாக,44 பேரிடம் 81 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர்.
பின்னர் பணத்தைக் கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு, அதன் பேரில் கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் மூன்று பேரும் ஆஜராகாததால் அவர்களுக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் அவர்கள் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதால், 3 பேரையும் சட்டப்பிரிவு 82ன் கீழ் தேடப்படும் குற்றவாளியாக நீதிபதி ரவி அறித்துள்ளார்.
Follow Us