Three students suspended on ambur school incident

Advertisment

ஆம்பூரில் அரசுப்பள்ளி தாவரவியல் ஆசிரியரை ஆபாசமாகத்திட்டி மாணவர் ஒருவர் தாக்க முயற்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவர் உட்பட மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் அரசுப்பள்ளியில் வகுப்பறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மாரி என்ற மாணவனிடம் தாவரவியல் ஆசிரியர் ரெக்கார்டு நோட்டு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்து எழுப்பியதால்ஆத்திரமடைந்தமாணவன் மாரி, ஆசிரியரை ஆபாசமாக திட்டி அவரைத் தாக்க முயற்சித்தான். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியில் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், மாணவன் மாரி மற்றும் அவனது நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.