Advertisment

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் சங்கிலி பறிப்பு!

Three shaving chains flush with woman walking down the road!

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் சங்கிலி வழிப்பறிச் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் அழகு சாதன கடையில் வேலைப் பார்க்கும் சுதா என்பவர், பணி முடிந்து கணபதிபுரம் பகுதி வழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் கீழே இறங்கி சாதாரணமாக தெருவில் செல்வது போன்று நடந்துச் சென்றனர். பின்னர், அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதா அணிந்திருந்த மூன்று சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினர்.

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக, தகவலறிந்த சேலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Chennai jewelry police thief
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe