Advertisment

நோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி;இருவர் பரிதாமாக பலி!!

sucide

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள காசிக்காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி வயது 55 விவசாயியான இவர் தனது மனைவி மணி வயது 49 மற்றும் தாய் கன்னியம்மாள் 79 வயது ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குருசாமிக்கு சில மாதங்களாக உடல் நலம் சரியில்லை இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தார் அப்போது அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. இதனால் குருசாமி குடும்பத்தினர் மனம் உடைந்தனர். சென்ற சில நாட்களாகவே வேதனையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குருசாமி சத்தியமங்கலம் சென்று பூச்சிகொள்ளி மருந்து கடையிலிருந்து திம் மெட் என்ற மருந்தினை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். மதியம் 1 மணியளவில் திம்மெட் விஷத்தை மாத்திரை கேப்சூலில் அடைத்து தனது தாயாருக்கும் மனைவிக்கும் கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டு3 பேரும் தற்கொலைக்கு முயற்சித்தனர்.

Advertisment

இதில் குருசாமியும் அவரது தாயார் கன்னியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குருசாமியின் மனைவி மணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் இதை கண்ட அருகே வசிப்போர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குருசாமிக்கு வெங்கிடு, சீனிவாசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கிடு தாளவாடியில் விவசாயம் செய்து வருகிறார். சீனிவாசன் கோவையில் மேன் பவர் ஏஜென்சி நடத்தி வருகிறார். நோய் பாதிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி அதில் இரண்டு பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

cancer village Suicide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe