Advertisment

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது

Three person arrested under pocso act in trichy

Advertisment

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் என்ற வாலிபர் காதலித்துவந்துள்ளார். இது அவருடைய வீட்டிற்குத் தெரிந்ததால், கேசவன் மற்றும் அவருடைய நண்பர்கள் பள்ளி மாணவியைக் கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அவரைக் கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு, கேசவன் மற்றும் அவருடைய நண்பர்களைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவிக்குத் தற்போது 15 வயது என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வாலிபர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

POCSO ACT trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe