புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

திருப்பூரில் வசித்து வந்தவர் ரித்தன்யா. இவர் தென்னை மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் புது மணப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக உடல் ரீதியாகத் தன்னை சித்திரவதை செய்ததாக ரித்தன்யா குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பி இருந்தார். 

Advertisment

இந்த தற்கொலை சம்பவத்தையடுத்து புதுமணப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அப்பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். புது மணப்பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் என்ற அடிப்படையில் இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.