Skip to main content

வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்த மூன்று பேர் கடல் அலைகளில் சிக்கி உயிரிழப்பு! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

Three people who were on a trip to Velankanni got caught in the waves and passed away

 

நாகை அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு விடுமுறை தினத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில்  இன்று காலை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ராஜகம்பீரம் என்ற ஊரில் இருந்து உறவினர்கள் 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர்.


வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கிய அவர்கள், கடலில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆரோக்கிய ஷெரின் (19), ரியானா (13), சஹானா (14)  ஆகிய மூவரும் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மேற்படி மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.


இறந்த மூவரின் பிரேதமும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்த மூன்று பேர் கடல் அலைகள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்