Advertisment

வேட்டைக்கு சென்ற மூவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

Three people who went hunting lost their lives; Police investigation

திருப்பத்தூர்அருகே வேட்டைக்கு சென்ற மூவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே முருகன் என்பவருடைய நிலத்தை குத்தகைய எடுத்து நீதி என்பவர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வருவதை தடுக்க நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (வயது 40) அவருடைய மகன் லோகேஷ் (வயது 14) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த கரிபிரான் (வயது 60) ஆகிய மூன்று பேர் நேற்று இரவு ஏலகிரி மலை பகுதிக்கு வனவிலங்குகளை வேட்டையாடச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது முருகன் என்பவருடைய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து குரிசிலாப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று பேர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாட எடுத்துச் சென்ற நாட்டுத் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மின்வேலி அமைத்த நீதி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident thiruppathur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe