விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்புராய பிள்ளை நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் இன்று அதிகாலை இவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த ஏசி. மெஷின் வெடித்துள்ளது. இதில் கிருஷ்ணன் (60 வயது) அவரது மனைவி கலா 52 வயது, அவரது மகன் 24 வயது கெளதமன் ஆகிய மூவரும் இறந்துள்ளனர்.

ac

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஏசி மெஷின் வெடிப்பு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துவிட்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மூன்று உடல்களையும் மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவரது மகன் கெளதமனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமண அழைப்பிதழ் வழங்கி வந்த நிலையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இதனால் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் வீடுகள் என பரவலான இடங்களில் ஏசி மெஷின் பொருத்தப்பட்டு அதன்மூலம் ஏற்படும் குளிர்ச்சியை மக்கள் அனுபவித்து வரும் நிலையில் அப்படிப்பட்ட ஏசி மெஷின் வெடித்து மூன்று மரணம் அடைந்துள்ள செய்தி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்து அதை விரிவாக வெளியிட்டால் மட்டுமே மக்களின் பயம் விலகும் என்கிறார்கள் ஏசி பயன்படுத்தும் மக்கள் பலர்.