Three people passed away due to poison gas attack in waste water tank;

Advertisment

தமிழக அரசு சார்பில், மனிதர்கள் இறங்கி கழிவு நீர்த்தொட்டிகளை சுத்தம் செய்யக்கூடாது மற்றும் கழிவு நீர்த் தொட்டிகளை அதற்கான எந்திரங்களை கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும் எனதொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் சொகுசு விடுதியில் உள்ள கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்ய மூன்று தொழிலாளிகள் இறங்கியுள்ளனர். விஷவாயு தாக்கி உள்ளே மரணமடைந்த நபர்களை தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் விடுதி நிர்வாகம் மற்றும் விடுதியின் மேலாளர் மீதுஇச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.