Three people passed away due to electric shock!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட சிறுப்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை ராமன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் மேல் பகுதியில் காய வைத்திருந்த துணியை எடுக்கும் பொழுது, மின் கம்பத்தில் இருந்து வரும் ஸ்டே கம்பியில் மின்சாரம் இருப்பது தெரியாமல் தொடும் பொழுது தந்தை மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டதால் மகன் காப்பாற்ற முயற்சிக்கும் போது மகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

Three people passed away due to electric shock!

Advertisment

இதேபோல் இன்று காலை அதே பகுதிக்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில், ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியசாமி என்பவர் வீட்டின் முன்பாக, மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு, மூன்று நபர்களின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Three people passed away due to electric shock!

அடுத்தடுத்து இரண்டு கிராமங்களில் மின்சாரம் தாக்கி மூன்று நபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.