/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4049.jpg)
தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட முதியவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 11 முதியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று முதியவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
முதியோர் இல்லத்தில் உபயோகிக்கப்பட்ட உணவின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எட்டு முதியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் முதியோர் இல்லத்தில் உள்ள சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் குழு விரைந்துள்ளது. காப்பக உரிமையாளரிடம்இது தொடர்பாகவிசாரணை நடத்த போலீசார் தயாராகி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)