சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது47), மீனவரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உள்ள உறவினரான முருகன் வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதர் நேற்று முன் நாள் இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு சாராயம் குடித்து கொண்டு இருந்த போது ஸ்ரீதருக்கும், வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல் (35) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கமலை ஸ்ரீதர் தாக்கினார். அதையடுத்து நேற்று (21.12.2018) அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதர் சாராயக்கடைக்கு சென்ற போது அங்கிருந்த கமலுக்கும், ஸ்ரீதருக்கும் மீண்டும் சண்டை ஏர்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கமல் அங்கிருந்த சோடா பாட்டிலை உடைத்து ஸ்ரீதரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். அதில் ஸ்ரீதர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அரையாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதேபோல் நேற்று மாலை புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(26) என்ற மெக்கானிக் நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த அய்யப்பனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் அய்யப்பன் முக்கிய குற்றவாளி என்பதும், அதற்கு பழிக்குப்பழியாக வெட்டபட்டாரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

murder

இந்நிலையில் நேற்று இரவு அரியாங்குப்பத்தை அடுத்துள்ள தமிழக பகுதியான சின்ன இருசம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் நோணாங்குப்பம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செயப்பட்டார்.

Advertisment

murder

நேற்று மட்டும் புதுச்சேரியில் 3 கொலைகள் நடந்துள்ளது. ஒரே நாளில் நடந்த தொடர் கொலைகளால் புதுச்சேரி மக்கள் பீதியில் உள்ளனர்.