dd

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி, பாப்பையன்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் நீரில் மூழ்கிய நிலையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Advertisment

கைலாசபட்டியில்முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் வெளியூர்களிலிருந்து தர்மராஜ் வீட்டிற்கு திருவிழாவிற்கு வந்த உறவினர்களான பன்னீர்செல்வம், தொட்டியபட்டி பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ருத்ரன், நிலக்கோட்டையைச் சேர்ந்த மணிமாறன், மீலாப்பட்டியை சேர்ந்த சபரி ஆகிய மூன்று சிறுவர்களை அழைத்துக் கொண்டு கைலாசபட்டி அருகே உள்ள பாப்பையன்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். இதில் நான்கு நபர்களும் நீரில் மூழ்கி சகதியில் சிக்கியுள்ளனர். உடனே அங்கு இருந்த சின்னசாமி என்பவர் நீரில் மூழ்கிய நான்கு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் ருத்ரன் என்ற சிறுவனைத்தவிர்த்து மற்ற மூன்று நபர்களும்சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

Advertisment

இறந்த பன்னீர்செல்வம், சபரி, மணிமாறன் ஆகியோரின் உடல்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.