சிறுமிக்கு பாலியல் தொல்லை- எட்டாம் வகுப்பு சிறுவர்கள் கைது

Three people including boys arrested for  harassing a minor girl

காஞ்சிபுரத்தில் பள்ளி சிறுவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயின்று வந்த சிறுமி ஒருவர் அதே களக்காட்டு பகுதியைச் சேர்ந்த எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 19 வயது இளைஞர்பள்ளி சிறுவர்களுடன் ஒன்று சேர்ந்து குளிர்பானத்தில் மருந்து கலந்து சிறுமியிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞன் மற்றும் சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குதகவல் தெரிவித்த நிலையில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இளைஞரையும் இரண்டு பள்ளி சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.

கை செய்யப்பட்ட பள்ளி சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு பள்ளி சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kanjipuram school student women safety
இதையும் படியுங்கள்
Subscribe