Advertisment

பேருந்து கண்ணாடி உடைத்த பாஜக தலைவர் உட்பட 3 பேர் கைது;காவல்நிலையம் முற்றுகை

இந்தியாவின் முன்னால் பிரதமர் வாஜ்பாய், ஆகஸ்ட் 16ந்தேதி மாலை 5 மணியளவில் காலமானார். அவர் மறைவுக்கு தமிழகரசு விடுமுறை அளித்துள்ளது. மத்தியரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.அவரது உடல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பலயிடங்களில் வாஜ்பாய் புகைப்படத்தை வைத்து பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

bus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்நிலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த அரசுபேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்துள்ளனர். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது. கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்தை ஓட்டியபடி ஆம்பூர் வந்த பேருந்து ஓட்டுனர் சின்னத்தம்பி ஆம்பூர் தாலுக்கா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் சுரேந்தர், கமல் ஆகிய 3 பேரை போலிஸார் கைது செய்து காவல்நிலையத்தில் அமரவைத்தனர்.

கைது செய்த அவர்களை விடுவிக்க கோரி பாஜக வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பாஜகவினர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பொது சொத்துக்கு நாசம் விளைவித்துள்ளார்கள், அதனால் விடமுடியாது என போலிஸார் கூற அவர்களை பாஜகவினர் மிரட்டியுள்ளனர். இருந்தும் போலிஸார் விடமாட்டோம் என உறுதியா இருப்பதால் அப்பகுதி பதட்டமாகவுள்ளது.

bus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதேப்போல் திருப்பத்தூர் நகர பாஜகவினர் சிலர், எங்கள் ஆசான் இறந்துட்டார், எதுக்காக கடை திறந்துவச்சியிருக்கிங்க என நகர வீதியில் கடைக்காரர்களிடம் பிரச்சனை செய்ய பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இந்த அராஜகத்தை போலிஸார் வேடிக்கை மட்டும்மே பார்த்தனர் என குற்றம்சாட்டுகின்றனர் வியாபாரிகள்.

breaks police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe