Skip to main content

திருச்சியில் பள்ளி மாணவர்களை குட்கா போதைக்கு அடிமையாக்கிய ராஜஸ்தான் இளைஞர்கள் 3 பேர் கைது!!

திருச்சி பெரியகடை வீதி வடமாநிலத்தினர் வியாபாரம் பண்ணும் பகுதி. இந்த இடத்தில் இரண்டாம் தரம் வியாபாரம் தான் முழு வீச்சில் நடைபெறுகிறது. ஒர்ஜினல் போன்று இரண்டாம் தரப்பொருட்கள் தான் தினமும் கோடி கணக்கில் கல்லாகட்டுவார்கள். 

ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த பல மாநிலத்தினர் காலணிகள் விற்கும் கடை, பெல்ட்ஈ பிளாஸ்டிக், பேனா, பல்பு, என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வைத்திருக்கிறார்கள்.

 

kutka

 

சமீபத்தில் தஞ்சாவூர் சாலையில் உள்ள பால்பண்ணையில் அருகே லாரி கடத்தல் வழக்கில் ரகசிய தகவல் அடிப்படையில் முசிறி டி.எஸ்.பி. சீத்தாராமன் சோதனை செய்த போது டாரஸ்லாரி அளவுக்கு குட்கா, போன்ற போதை வஸ்துகள் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குடோனுக்கு சொந்தக்காரர்கள் பெரியகடைவீதியில் உள்ள பெரிய சேட்டு என்பதாலும், டி.எஸ்.பி. சீத்தராமன் ஏற்கனவே கோட்டை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தால் இதை பற்றி சிட்டி போலிசுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இதன் அடிப்படையில் காந்திமார்கெட் போலிசார் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் கண்காணிப்பில் இருந்தனார். அப்போது பெரியகடை வீதியில் மொபட் ஒன்றில் 2 பேர் பெரிய மூட்டைகளுடன் வந்தனர்.

அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி விற்பனைக்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவற்றை கொண்டு வந்த பெரியகடை வீதி சின்ன கம்மாளத்தெருவை சேர்ந்த பாபுதாராம் மகன் ஓக்காராம் (வயது27), போலாராம் மகன் தேவராம்(20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

அவர்கள் பயன்படுத்திய மொபட்டும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் கொடுத்த தகவலின் பேரில், பெரியகடை வீதி கம்மாளத்தெருவை சேர்ந்த ஓக்காராமின் சகோதரர் மங்களராம்(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

கைதான 3 பேரிடம் இருந்தும் 2 மூட்டை புகையிலை, 1 மூட்டை பான்பராக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.


போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து செருப்பு விற்கும் கடை, பெல்ட் கடை ஆகியவற்றில் வைத்து பள்ளி சிறுவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள். போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கைதான 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் பெரியகடை வீதியில் வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்துள்ளனர். 

 

kutka

 

இவர்களுக்கு மூளையாக செயல்பட்டவரை இன்னும் திருச்சி போலிஸ் கைவைக்கவில்லை என்கிற சர்ச்சையும் கிளப்பியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 30ந்தேதி புழல் அருகே புழல் காவல் ஆய்வாளர் நடராஜ், சரஸ்வதி நகர் 3-ஆவது தெருவில் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு காரில் இருந்து 2 இளைஞர்கள் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆய்வாளர் சந்தேகத்தின்பேரில் அந்த மூட்டைகளை ஆய்வு செய்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் , குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தன. விசாரணையில், சிவகாசியைச் சேர்ந்த கண்மணி வசந்த்குமார் ஆகிய இருவரும் புழல் சரஸ்வதி நகரில் வாடகை வீட்டில் தங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸார், இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான 5 மூட்டை போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

 

 

கடந்த மே மாதம் 24 ம் தேதி கோவையில் ராஜா வீதியில் சந்தேகப்படும்படியாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர்கள் ரூபேஷ், பாபுசிங்கிடம் பிடித்து விசாரணை நடத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை சந்திரா டிரேடர்ஸ் கடையில் இரு மினி சரக்கு ஆட்டோக்களில், 6.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 840 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா, பான்பராக் ஆகியவை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

 

 

கடந்த ஜீன் 29ம் தேதி திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தில் வைக்கப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கணபதிநகரில் உள்ள ஒரு குடோனில் குட்கா சுமார் 2 இலட்சம் மதிப்புள்ள கைப்பற்றியுள்ளார்கள். 

கடந்த டிசம்பர் மாதம் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வரும் இரயில்களில் 2 மாதங்களாக ஒவ்வொரு ரயிலிலும் 300 பெட்டி வீதம் கிட்டதட்ட 7800 பெட்டிகள் மதுரையில் இறங்கி தற்போது தமிழகம் முழுவதும் விற்பனைக்கு சென்று இருப்பதை தான் தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்