கடலூரில் கஜா புயலையொட்டி நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை கனமழை விட்டு விட்டு பெய்தது. அவ்வப்போது காற்றும் பலமாக வீசியது.

Advertisment

காற்றினால் கடலூர்மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. சாய்ந்த மரங்களை அகற்றும் பணியிலும், மின் கம்பங்களை சரி செய்து மின் இணைப்புகள் கொடுக்கும் பணியிலும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பலகிராம புறங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

kaja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரும், மழை நீரும் அதிகரித்ததால் மேற்கு பரவனாற்றில் வெள்ளம் அதிகரித்து 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் வடலூர் அடுத்த மேலக்கொளக் குடியில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பின்னர் வடிந்தது.

kaja

விருத்தாசலம் அடுத்த மே.மாத்தூரில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரும் இவரது மனைவி அய்யம்மாள் மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு முதல் கனமழை பொழிந்ததால் ராமச்சந்திரன் வீட்டில் அடுக்கி வைத்திருந்த, ஹாலோ பிளாக் சரிந்து விழந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயத்துடன் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதில் அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகள் சபரீஸ்வரி ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

kaja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதேபோல் குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த்(40) என்பவரும்,பண்ருட்டி நடுக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் எனும் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த போது மரம் விழுந்தும் பலியாகினர்.