Three people arrested for robbing seven shops in succession!

சென்னை அருகே ஆவடியில் ஏழு கடைகளின் பூட்டை உடைத்து 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களை அபகரித்த ரவுடி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லிசாலையில் உள்ள ஏழு கடைகளின் பூட்டை உடைத்து திருடிய வினோத், மகேந்திரன், தினேஷ் குமார் ஆகியோரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆவடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய பணத்தை மது அருந்தியும், ஆடம்பரமாகவும் செலவழித்ததாகவும் விசாரணையில் அவர்கள் கூறினர்.

Advertisment