Advertisment

வெறி நாய் கடித்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!

Three people admitted to hospital after being bitten by a rabid dog

Advertisment

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளை கொண்ட நகரப் பகுதியாகும். இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . சாலையில் வாகனங்களில் செல்வோர் மட்டும் நடந்து செல்லும் பொது மக்களை தெருநாய்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாகியுள்ளது.

இதனிடைய பேர்ணாம்பட்டு மதினி தெருவைச் சேர்ந்த முஹமத் அல்ஹான் (9) என்ற பள்ளி மாணவன் விளையாடி கொண்டிருக்கும் போது தெரு நாய் கடித்துள்ளது. அதேபோல் பங்களா மேடு பகுதியை சேர்ந்த தஸ்தகீர் அகமது(33), சவுக் ரோடு பகுதியை சேர்ந்த முதியவர் சம்பத் (58), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், நிகிதா, குல்ஜார், முஹமத் அலியான் ஆகியோர்கள் நாய் கடித்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகன் உட்பட போலீசார் நாய் கடித்து சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

hospital Vellore dog
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe