Advertisment

துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட பரிதாபம்..!

Three passes away in pudhuchathiram

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைஅடுத்த மேட்டுகாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (29). இவர், நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருடன்காரில் சென்றுள்ளார். இந்த நிலையில், துக்க நிகழ்ச்சி முடிந்து, 11ஆம் தேதி அவர்கள் 4 பேரும் அதே காரில் ஸ்ரீபெரும்புதூருக்குவந்துள்ளனர். அப்போது காரை சரத்குமார் ஓட்டியுள்ளார். அவர்கள் காரைக்கால், திருக்கடையூர் வழியாக வந்து சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதி மேட்டுப்பாளையம் அருகே இரவில் வரும்போது கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்த ரகுபதி, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மட்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் இரவு 30 நிமிடத்திற்கு மேலாக சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

accident Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe