
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பாசஞ்சர் மற்றும் சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்பட்டு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று துபாயிலிருந்து ஒரு இந்திய விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வான் நுண்ணறிவு பிரிவினர் பயணிகளிடம் சோதனை செய்தனர். அதில், ஆண் பயணி தனது ஆசனவாயில் ரூ. 47,54,494 மதிப்புள்ள 907.000 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு ஆண் பயணி தனது உடம்பின் ஆசன வாயில் ரூ.4,79,160 மதிப்புள்ள 99.000 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு ஆண் பயணி கட்டிங் பிளேரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 9,33,076 ரூபாய் மதிப்புள்ள 178 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த 3 நபர்களையும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.