Three month old baby girl kidnapped in koyambedu market ..!

Advertisment

விழுப்புரம் மாவட்டம், நெண்டியான்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ், கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு வருடமாக, அங்குள்ள கடையில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று 8.11.2020 ஆம் தேதி இரவு 11 மணியளவில், கடை முன்பு உள்ள திண்ணையில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளார்.

நாள் முழுவதும் வேலை என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை3.30 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது, தனது மூன்று மாதமேயான சஞ்ஜனா என்ற அந்த பெண் குழந்தையை காணவில்லை.

Advertisment

பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், கே -10 கோயம்பேடு காவல் நிலையத்தில் தனது குழந்தையைக் கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிசிடிவிகேமாராவை ஆய்வு செய்து வருகின்றனர்.