சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோவில் விழாவின் வானவேடிக்கை நிகழ்ச்சிக்காக பைக்கில் பட்டாசுகளை எடுத்துச் சென்ற பொழுது காடையாம்பட்டி அருகே பைக்கில் இருந்தபட்டாசுதிடீரென வெடித்துச் சிதறியது. இதில் பட்டாசுகளை கொண்டு சென்றவர்; 10 வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.