Three jailed under anti-thuggery law

Advertisment

திருச்சியைச் சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளாரான அருண்பாபு (36). இவரைக் கடந்த 23.12.21-ந் தேதி தில்லைநகர் 5வது கிராஸ் நியாயவிலைக் கடை சூப்பர் மார்க்கெட் அருகில் முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்ய முயற்சித்ததாகப் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் காவல் துறையினர் 735/21, U/s 294 (b), 427, 307 IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

இதில் முதல் குற்றவாளியான 7ஹில்ஸ் பாலன் தலைமறைவாக இருந்த நிலையில், பார்த்திபன், முகமதுசயிப், அரவிந்த்ராஜ் ஆகியோர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் விசாரணையில் மேற்படி வழக்குகளின் குற்றவாளிகளான பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன் ஆகியோர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, மேற்படி குற்றவாளிகள் பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு, தில்லைநகர் காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினைப் பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், அவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளுக்குகுண்டர் தடுப்புச் சட்ட ஆணையைக் கொடுத்து,சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மேற்கண்ட வழக்கில் கொலை முயற்சிக்கு மூலகாரணமாகச் செயல்பட்டு தலைமறைவாக இருந்து வந்த கட்டிட ஒப்பந்தக்காரரானபாலன் (எ) செவன்கில்ஸ் பாலன் என்பவர் தனிப்படையினரால் (25.01.22)கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.